Friday 22 November 2019

ராசிக்குரிய-மரங்கள்

ராசிக்கேற்ற மரங்கள்:


  1. மேஷம் – செஞ்சந்தனம்
  2. ரிஷபம் – ஏழிலைப்பாலை
  3. மிதுனம் – பலா
  4. கடகம் – பொரசு
  5. சிம்மம் – பாதரி
  6. கன்னி – மா
  7. துலாம் – மிகிழம்
  8. விருச்சிகம் – கருங்காலி
  9. தனுசு – அரசு
  10. மகரம் – எட்டி
  11. கும்பம் – வன்னி
  12. மீனம் – ஆல்

எந்த ராசிக்கு எந்த மரம்

எந்த ராசிக்கு எந்த மரம்

அந்த ஒவ்வொரு மரத்துக்கும் தனியே மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் தான் பழங்காலத்தில் மக்கள் மரங்களை வழிபட்டு வந்தனர்.
ஒவ்வொரு ராசியினரும் அந்தந்த ராசிக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே அதிர்ஷடமும் நற்பலன்களும் உண்டாகும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் செஞ்சந்தன மரத்தை வழிபட்டு வர வேண்டும். இதற்கு சந்தன வேங்கை என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த மரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேஷ ராசிக்காரர்கள் வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் அத்திப்பழ மரத்தை வழிபாடு செய்ய வேண்டும். சுப தினங்களில் கோவில்களில்உள்ள அத்திமரத்தை 11 முறை சுற்றிவந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிச்சுமைகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும்.

மிதுனம்

ஒரு காலத்தில் நிறைய சிவாலயங்களில் வில்வ மரம் இருந்த அளவுக்கு பலா மரங்களும் ஸ்தல விருட்சமாக இருந்துள்ளன. கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் அம்மன்விக்கிரகமே பலா மரத்தில் செய்யப்பட்டிருக்கிறது. பலாமர வழிபாடு குழந்தை பேறைக் கொடுக்கும்.

கடகம்

திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம்) தல மரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும், தட்டையான விதைகளையும் உடைய இலையுதிர் காடுகளில் தானே வளரும் மரமாகும். அழகுக்காக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.
இது காமம் பெருக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் இருக்கும். அவ்வளவு சிறப்பான மருத்துவ குணம் கொண்ட வழிபடுவதில் தவறில்லையே.

சிம்மம் -

சிம்ம ராசிக்காரர்கள் குருந்த மரத்தை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு சகல செல்வங்களும் கைகூடி வரும். இது திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோயிலின் தல மரமாக விளங்குகிறது. இதில் சிறுகுருந்து, பெருங்குருந்து என்னும் வகைகளும் உண்டு. உடல்வெப்பத்தை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் மாமரம். ஏகாம்பர நாதர் கோவில் மற்றும் மயிலாடுதுறை,திருப்பெரும்புதூர் சிவன் கோவில்களில் மாமரம் தல விருட்சமாக இருக்கிறது. முருகன் சிவனை மாமரத்தின் அடியில் நின்று வணங்கி வரம் பெற்ற சிறப்புண்டு. அதனால் மா மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தால் மூதாதையர்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை.


துலாம்

துலாம் ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் மகிழ மரம். மகிழம்பூ மரத்தின் மணம்மிக்க மலர்களில் இருந்து, வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தன மர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம். மகிழ மரத்திற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை. ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக் கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய, நறுமணமான பூக்களை உடைய பசுமை மரம்.
இந்த மரத்தை வழிபட்டால் கல்வியும் ஞானமும் பெருகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய மரம் கருங்காலி மரம். வெப்பத்தை தங்கிவளரும். இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உறுதியளிக்கும் சக்தி கொண்டது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய மரம் அரசு. அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றது. அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறன.
அரச மரத்தின் பட்டை, வேர், விதை இவற்றைப் பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பை, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.
அரச மரத்திலிருந்து வெளியிடப்படும் தூய்மையான அதிகப்படியான பிராணவாயு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் ஈட்டி மரம். குறிப்பாக, பூராட நட்சத்திரத்தன்று நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வது உங்கள் குறைகளைப் போக்கி, இனிமையான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் வன்னி. சிவனுக்கு மட்டுமே முதல் தலவிருட்சமாகும். வன்னி மர குச்சிகள் இல்லையென்றால் சிவனுக்கு எந்தவொரு யாகமும் முக்த்தி பெறாது. அதனால், வன்னி மரம் தல விருட்சமாகக் கொண்ட சிவனை வழிபடுவது சிறப்பாகும். தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழீஸ்வரம் ஆகிய கோவில்களில் வன்னி மரமே தல விருட்சமாக அமைந்திருக்கிறது.
மீனம் ராசிக்காரர்கள் புன்னை மரத்தை வழிபட்டு வர வேண்டும். குறிப்பாக, திருமணம் தடைபடுகிறவர்கள் புன்னை மரத்தை வழிபடுவது சிறப்பு. புன்னை மரத்தை திருமணம் தடைபடுவோர் சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல் நவக்கிரகங்கள் மற்றும் துணைவியாருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட உடனே திருமணம் நடைபெறும்

பிறந்த நட்சத்திரத்துக்குரிய விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் or விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!!


நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு
உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து
வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். உங்கள்பாவக் கதிர்களை
கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சிலமரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் கண்படும் இடங்களில், உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லைஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில்சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும் அந்த மரக்கன்றையும் அவரதுபிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிகநன்று.
மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டுஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.
இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கை மலரும் அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும் .கர்ம வினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம் ’இப்படி ஒரு வழிகாட்டுகிறது.
இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரிய
விருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்
அஸ்வினி
1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)
2 ம் பாதம் - மகிழம்
3 ம் பாதம் - பாதாம்
4 ம் பாதம் - நண்டாஞ்சு
பரணி
1 ம் பாதம் - அத்தி
2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு
3 ம் பாதம் - விளா
4 ம் பாதம் - நந்தியாவட்டை
கார்த்திகை
1 ம் பாதம் - நெல்லி
2 ம் பாதம் - மணிபுங்கம்
3 ம் பாதம் - வெண் தேக்கு
4 ம் பாதம் - நிரிவேங்கை
ரோஹிணி
1 ம் பாதம் - நாவல்
2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை
3 ம் பாதம் - மந்தாரை
4 ம் பாதம் - நாகலிங்கம்
மிருகஷீரிஷம்
1 ம் பாதம் - கருங்காலி
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - வேம்பு
4 ம் பாதம் - நீர்க்கடம்பு
திருவாதிரை
1 ம் பாதம் - செங்கருங்காலி
2 ம் பாதம் - வெள்ளை
3 ம் பாதம் - வெள்ளெருக்கு
4 ம் பாதம் - வெள்ளெருக்கு
புனர்பூசம்
1 ம் பாதம் - மூங்கில்
2 ம் பாதம் - மலைவேம்பு
3 ம் பாதம் - அடப்பமரம்
4 ம் பாதம் - நெல்லி
பூசம்
1 ம் பாதம் - அரசு
2 ம் பாதம் - ஆச்சா
3 ம் பாதம் - இருள்
4 ம் பாதம் - நொச்சி
ஆயில்யம்
1 ம் பாதம் - புன்னை
2 ம் பாதம் - முசுக்கட்டை
3 ம் பாதம் - இலந்தை
4 ம் பாதம் - பலா
மகம்
1 ம் பாதம் - ஆலமரம்
2 ம் பாதம் - முத்திலா மரம்
3 ம் பாதம் - இலுப்பை
4 ம் பாதம் - பவளமல்லி
பூரம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - வாகை
3 ம் பாதம் - ருத்திராட்சம்
4 ம் பாதம் - பலா
உத்திரம்
1 ம் பாதம் - ஆலசி
2 ம் பாதம் - வாதநாராயணன்
3 ம் பாதம் - எட்டி
4 ம் பாதம் - புங்கமரம்
ஹஸ்தம்
1 ம் பாதம் - ஆத்தி
2 ம் பாதம் - தென்னை
3 ம் பாதம் - ஓதியன்
4 ம் பாதம் - புத்திரசீவி
சித்திரை
1 ம் பாதம் - வில்வம்
2 ம் பாதம் - புரசு
3 ம் பாதம் - கொடுக்காபுளி
4 ம் பாதம் - தங்க அரளி
சுவாதி
1 ம் பாதம் - மருது
2 ம் பாதம் - புளி
3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை
4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை
விசாகம்
1 ம் பாதம் - விளா
2 ம் பாதம் - சிம்சுபா
3 ம் பாதம் - பூவன்
4 ம் பாதம் - தூங்குமூஞ்சி
அனுஷம்
1 ம் பாதம் - மகிழம்
2 ம் பாதம் - பூமருது
3 ம் பாதம் - கொங்கு
4 ம் பாதம் - தேக்கு
கேட்டை
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - பூவரசு
3 ம் பாதம் - அரசு
4 ம் பாதம் - வேம்பு
மூலம்
1 ம் பாதம் - மராமரம்
2 ம் பாதம் - பெரு
3 ம் பாதம் - செண்பக மரம்
4 ம் பாதம் - ஆச்சா
பூராடம்
1 ம் பாதம் - வஞ்சி
2 ம் பாதம் - கடற்கொஞ்சி
3 ம் பாதம் - சந்தானம்
4 ம் பாதம் - எலுமிச்சை
உத்திராடம்
1 ம் பாதம் - பலா
2 ம் பாதம் - கடுக்காய்
3 ம் பாதம் - சாரப்பருப்பு
4 ம் பாதம் - தாளை
திருவோணம்
1 ம் பாதம் - வெள்ளெருக்கு
2 ம் பாதம் - கருங்காலி
3 ம் பாதம் - சிறுநாகப்பூ
4 ம் பாதம் - பாக்கு
அவிட்டம்
1 ம் பாதம் - வன்னி
2 ம் பாதம் - கருவேல்
3 ம் பாதம் - சீத்தா
4 ம் பாதம் - ஜாதிக்காய்
சதயம்
1 ம் பாதம் - கடம்பு
2 ம் பாதம் - பரம்பை
3 ம் பாதம் - ராம்சீதா
4 ம் பாதம் - திலகமரம்
பூரட்டாதி
1 ம் பாதம் - தேமா
2 ம் பாதம் - குங்கிலியம்
3 ம் பாதம் - சுந்தரவேம்பு
4 ம் பாதம் - கன்னிமந்தாரை
உத்திரட்டாதி
1 ம் பாதம் - வேம்பு
2 ம் பாதம் - குல்மோகர்
3 ம் பாதம் - சேராங்கொட்டை
4 ம் பாதம் - செம்மரம்
ரேவதி
1 ம் பாதம் - பனை
2 ம் பாதம் - தங்க அரளி
3 ம் பாதம் - செஞ்சந்தனம்
4 ம் பாதம் - மஞ்சபலா
தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்.

27 நட்சத்திர மரங்கள்

27 நட்சத்திர மரங்கள்

  1. அஸ்வினி -எட்டி
  2. பரணி- நெல்லி
  3. கிருத்திகை -அத்தி
  4. ரோகிணி – நாவல்
  5. மிருக சீரீடம் – கருங்காலி
  6. திருவாதிரை -செங்கருங்காலி
  7. புனர்பூசம் -மூங்கில்
  8. பூசம் – அரசு
  9. ஆயில்யம் -புன்னை
  10. மகம் – ஆலமரம்
  11. பூரம் – பலா
  12. உத்திரம் -அலரி
  13. அஸ்தம் -வேலமரம்
  14. சித்திரை- வில்வம்
  15. சுவாதி – மருதம்
  16. விசாகம் – விளா
  17. அனுசம் – மகிழம்
  18. கேட்டை – புராய்மரம்
  19. மூலம் – மாமரம்
  20. பூராடம் – வஞ்சி
  21. உத்திராடம் – பலாமரம்
  22. திருவோணம் – எருக்கமரம்
  23. அவிட்டம் -வன்னி
  24. சதயம் – கடம்பு
  25. பூரட்டாதி – தேமா
  26. உத்திரட்டாதி -வேம்பு
  27. ரேவதி – இலுப்பை

 ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அதற்கேற்ற மரங்கள் உள்ளன. அதை நட்டு வழிபடுவதன் பயனாக அந்த நட்சத்திரத்திற்குரிய தேவதைகளை குளிரவைக்க முடியும். இதன் மூலம் வாழ்வில் அனைத்துவிதமான வளங்களையும் நலன்களையும் பெறலாம். எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த மரம் நட்டால் அதிஷ்டம் என்று பார்ப்போம் வாருங்கள். 

அசுவினி: இந்த நட்சத்திரக்கார்கள் எட்டி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

பரணி: இந்த நட்சத்திரக்கார்கள் நெல்லி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

கிருத்திகை: இந்த நட்சத்திரக்கார்கள் அத்தி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

ரோகிணி: இந்த நட்சத்திரக்கார்கள் நாவல் மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

மிருகசீரிஷம்: இந்த நட்சத்திரக்கார்கள் கருங்காலி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

திருவாதிரை: இந்த நட்சத்திரக்கார்கள் செங்கருங்காலி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

புனர்பூசம்: இந்த நட்சத்திரக்கார்கள் மூங்கில் மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

 பூசம்: இந்த நட்சத்திரக்கார்கள் அரச மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

ஆயில்யம்: இந்த நட்சத்திரக்கார்கள் புண்ணை மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

மகம்: இந்த நட்சத்திரக்கார்கள் ஆலமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

பூரம்: இந்த நட்சத்திரக்கார்கள் பலா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

உத்திரம்: இந்த நட்சத்திரக்கார்கள் அலரி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

அஸ்தம்: இந்த நட்சத்திரக்கார்கள் வேலமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

சித்திரை: இந்த நட்சத்திரக்கார்கள் வில்வமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

சுவாதி: இந்த நட்சத்திரக்கார்கள் மருதமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

விசாகம்: இந்த நட்சத்திரக்கார்கள் விளா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

அனுஷம்: இந்த நட்சத்திரக்கார்கள் மகிழம்பூ மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

 கேட்டை: இந்த நட்சத்திரக்கார்கள் குறும்பலா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

மூலம்: இந்த நட்சத்திரக்கார்கள் மாமரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

பூராடம்: இந்த நட்சத்திரக்கார்கள் வஞ்சி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

 உத்திராடம்: இந்த நட்சத்திரக்கார்கள் பலா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

திருவோணம்: இந்த நட்சத்திரக்கார்கள் எருக்கஞ்செடியை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

அவிட்டம்: இந்த நட்சத்திரக்கார்கள் வன்னி மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

 சதயம்: இந்த நட்சத்திரக்கார்கள் கடம்ப மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

பூரட்டாதி: இந்த நட்சத்திரக்கார்கள் தேமா மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

உத்திரட்டாதி: இந்த நட்சத்திரக்கார்கள் வேம்பு மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம். 

ரேவதி: இந்த நட்சத்திரக்கார்கள் இலுப்பை மரத்தை நட்டு வளர்ப்பதன் மூலமும் வணங்குவதன் மூலமும் பல விதமான அதிஷ்டங்களை பெறலாம்.

மரம் - தமிழ் கவிதைகள்


மரம் வளர்ப்போம் கவிதை - கவிஅன்பு

மனிதனே சிந்திப்பாயா மரம் பற்றி...
மரம் வளர்க்க சொல்கிறேன் உன் கரம் பற்றி..    

குடம்குடமா தண்ணீரை  குடிச்சும் தாகம் தீரல !..
கோடையோட வெப்பமது கொஞ்சமும் மாறல !!
வெயிலுக்கு இளைப்பாற  மரமில்ல -ஆனாலும்
மனுசனுக்கு மரம் வளர்க்க இங்க மனமில்ல !!

கண்ட இடங்களில் கட்டிடம் முளைத்து
கண்போன்ற மரங்கள் காணாமல் போனால்
கோடை வெப்பம் கொளுத்தாமல் - நம்மை
கொஞ்சவா செய்யும்? - பூமியின்
பச்சையை அழித்து பலவண்ணம் ஏந்துகிறோம்
களைப்புடன் நடை ! கைகளில் வண்ண குடை !

மழை நீருக்கு மரங்கள்தானே  கருவானது !
அதை மெல்ல அழித்ததால் தெருவெங்கும்
குடிநீர் பஞ்சம்தானே இங்கு உருவானது !!...
மரம் கொன்று மழை வேண்டி இங்கே யாகங்கள்!
கலிகால மனிதரால் மரங்களோடு  சேர்ந்து
மறைந்து போகிறது வான் மழை மேகங்கள்!!

வறுத்தெடுக்கும் வானத்து சூரியனால்
வாடி போகிறது  தேகங்கள் !
வாசல்தோறும் குடிநீர் பஞ்சத்தால்
தணியாமல் நீளும்  மனித தாகங்கள் !!

கோடைக்கு இயற்கை  மரங்கள் அன்றி
குளிர்சாதன செயற்கையை  நீ நாடினால்
பக்கவிளைவில் பாதிக்கப்பட்டு
பாழாய் போயி விடும்  உன் உடல் !
உன் நலன் காக்கவும் உரிமையோடு
மரம் வளர்க்க சொல்லி நான்
வரைகிறேன் இந்த கவிதை மடல் !!.....
மரம் வளர்ப்போம் ..
மரமே நமக்கு கடவுளின் கொடை....
வெயிலுக்கு இனி கைகளில் வேண்டாம் குடை ..
மரமே பூமியின் பசுமை ஆடை
மரம் இருந்தால் வதைக்குமா இந்த கோடை?வியர்வையில் குளிக்காமல்
நம் சந்ததி  தண்ணீரில் குளிக்க
மரங்களை வளர்த்து வைப்போம்
கட்டிடங்களை விட பூமியில் மர
விதைகளை அதிகம் விதைப்போம்....
இனியும் மரம் வளர்க்காமல்
சுயநல மனிதனாய்  பூமியில்  நீ
சுற்றி வந்தால் காணாமல் அழிந்து போவது
மரங்கள் மட்டும் அல்ல
வாட்டும் வெயில் தண்ணீர் பஞ்சத்தோடு
வறட்சியில் சிக்க போகும் உன்
வருங்கால சந்ததியும்தான்
             


    - கவிஞர்  கவிஅன்பு..










மரங்களின் மடல் ...


உயிர் இருந்தும் நிலையானோம் ...
நிலை பெற்றும் நிழல் தந்தோம் ...
நிழல் தந்து சிலை காத்தோம் ...
நான்  காத்த சிலை உன்னை காக்கும் என்றாய
சிலை காத்த என்னை ஏன் காக்க மறந்தாய் ...
கரிவாயு உட்கொண்டு , உயிர் வாயு உமக்களித்தோம் ....
பிறர்  , உயிர் பிழைக்க மழை தந்தோம் ...
வந்த , மழை கொண்டே உயிர்  பிழைத்தோம் ....
எழுத்துக்கு காகிதமாய் ,உலகெங்கும் உருப்பெற்றோம் ...
எதையெதையோ உருவாக்க , எரிபொருளாய் உருக்குலைந்தோம் ...
பசுமை என்னும் பாற்கடலை , மண் மேலே படைத்திருந்தோம்  ....
ரசனை என்பது சிறிதுமின்றி , வனத்தோடு வதம் செய்தாய் ...
வானளவு வளர்ந்திருந்தோம் , வாள் கொண்டு வதை செய்தாய் ...
நோயற்ற வாழ்வளித்தோம் , நொடிப் பொழுதில் வீழ்த்திவிட்டாய் ...
வானம் பார்த்த பூமியிலே , வனம் காக்க யாருமில்லை ...
வீட்டுக்கொரு மரம் வளர்த்தால் , வீதிக்கே மழை கொடுப்போம் ...
காட்டை நீ காத்து வந்தால் , நாட்டுக்கே நலம் சேர்ப்போம் ...
வனம் யாவும் செழித்திருந்தால் , வளமாகும் தேசம் எங்கும் ...
இயற்கை வளங்களை  காத்திடுவோம் , இயற்கையோடு  இணைந்திருப்போம் ...


ஒற்றைப் பனை மரம் - தமிழ் கவிதைகள்
ஒற்றைப் பனைமரம் ஒன்று
ஓங்கி நிமிர்ந்து நிற்கிறது
கிளையிட அதற்க்கு வழியில்லை
அதில் பறவைகள் ஏதும் தங்கவில்லை
நாணல் போல் அது வளையவில்லை
நானிலத்தில் யார்க்கும் அஞ்சவில்லை
இயற்க்கை சீறி அதை தீண்டினாலும்
இயைந்து சற்றும் கொடுக்கவில்லை
இளைப்பாற அதற்க்கு நிழல் இல்லை
இருந்தும் அது சற்றும் தளரவில்லை
பல வகையில் பலன் தருகிறது
பலனை மட்டும் எதிர் நோக்கவில்லை
பார்க்க முரடாய் தோன்றினாலும்
பருகும் இனிமைத் தருகிறது
காற்றுத் தேவன் கடுமை இருந்தும்
பூமித்தாயின் பிடியில் நிற்கிறது
வாழ்க்கை என்னும் பாதையிலே
நாம் பயணம் செய்து போகையிலே
பல பனைமரம் நடுவில் நிற்கின்றன
நமக்கு பலனைத் தந்து மறைகின்றன
கண்டும் காணாமல் நாம் சென்றாலும்
நம் கருத்தில் புகுந்து நிறைகின்றன