சிவனுக்கு உகந்த மரம் வில்வ மரம்.
தெய்வீக மரமாக கருதப்படும் வில்வ மரம், எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின்
அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின்
தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச்
சார்ந்தது. இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டு இருந்தால் அதை மகாவில்வம்
என்பார்கள்.
நமது முன்னோர்கள் ஆன்மிகம் என்ற
பெயரில் மருத்துவத்தையும், அறிவியலையும் பிணைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.
காலப்போக்கில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. காலம் மருவிய பின்பு மனிதனின்
இடை சொருகல்களில் பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், மருத்துவம் சார்ந்த
விஷயங்களும் கண்மூடித்தனமான காரியங்களாக மாறிவிட்டது.
இந்த வகையில் இப்போது வில்வத்தை
சிவனுக்கு அணிவிக்கும் மாலையாகவும், பூஜைக்கு வைக்கப்படும் பொருளாகவும் மட்டுமே
பெரும்பாலானோர் எண்ணுகின்றனர் அதில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள்
எண்ணிலடங்காதவை. மகரந்தத் தூள்கள் கொண்டது வில்வம் என கூறப்படுகிறது. வில்வமர
நிழல், காற்று இவற்றிலும் கூட மருத்துவ சக்தி இருக்கிறது..
அகலாத செல்வம் கொடுக்கிற அபூர்வ வில்வ மரம்
சிவபெருமானின் அம்சமாக விளங்குகிற வில்வமரத்தின் சிறப்பை சிவராத்திரி காலத்தில் அறிந்து வணங்குதல் வேண்டும். வில்வங்களில் 21 வகைகள் உள்ளதாகவும், அவற்றில் மகா வில்வமும், அகண்ட வில்வமுமே மிக உயர்ந்தாக சொல்லப்படுகிறது.
தேவலோகத்தை சேர்ந்த பஞ்ச தருக்களான ஐந்து மரங்களுள் (பாதிரி, மா, வன்னி, மந்தாரை, வில்வம்) என்று வில்வம், லட்சுமி தேவியின் திருக்கரங்களிலிருந்து தோன்றியதாக வராக புராணம் கூறுகிறது. வில்வ மரத்தை வழிபடுவதால் லட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிட்டும்.
வில்வ இலைகள் சிவன் எனவும், முட்கள் சக்தி எனவும் கிளைகளே வேதங்கள் என்றும் வேர்கள் யாவும் முக்கோடி தேவர்கள் என்றும் போற்றப்படுகிறது. சிவ பூஜை சமயத்தில் வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் அகன்று தோஷங்கள் மறைந்து பகவான் ஈசனது அருட்பார்வை கிடைக்கும்.
ஒரு வில்வ தனத்தை சிவனுக்கு அர்ப்பணம் செய்வதால் மூன்று ஜென்ம பாவம் விலகும் என்கிறது. அகண்ட வில்வம் இருபத்தோரு வில்வ வகைகளுள் மிகவும் சக்தி வாய்ந்த வகை. இதன் காய்கள் சற்றே ஆப்பிள் பழம் போன்று தோற்றம் அளிக்கும். இலைகளை சிவார்ச்சனைக்கு பயன்படுத்திக் காய்களை மகாலட்சுமி யாகத்திற்கு பயன்படுத்துவார்கள்.
No comments:
Post a Comment