நாகலிங்க மரம்
நாகலிங்க
மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான
மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. ஆன்மீகத்துடன் அதிசயம் நிறைந்துள்ள இந்தப் பூக்கள்
செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும்
கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை
பரப்பி அதில் பூக்கின்றன. இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய்
தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன.
உலகமுழுவதும் சைவர்களால்
சிவ அம்சமாக இந்தப் பூக்கள் வணங்கப்படுகின்றன. மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக
இருந்தாலும், இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று
வெளிநாட்டினர் அழைக்கின்றனர். பூவின் தோற்றம் சிவாலயத்தை நினைவு படுத்தும் வகையில்
அமைந்திருக்கும். நடுவில் சிவலிங்கமும், அதைச்சுற்றி முனிவர்கள் இருப்பதைப்போல
தெய்வாம்சம் நிறைந்த அழகிய வடிவில் காணப்படும்.
இதன் உலர்ந்த பழங்கள்
கீழே விழுந்து தரையில் பட்டு வெடித்து பெரும் சத்தத்தை ஏற்படுத்தும். ஆகவே
கோயில்களில் கொள்ளையர்கள் புகாமல் இருக்க, பாதுகாப்பின் அடையாளமாக நாகலிங்க
மரங்கள் கோயில்களில் வளர்க்கப்படுகின்றன. இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில்
குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில
இடங்களிலும் இருக்கிறது.
செயல்திறன்
மிக்க வேதிப்பொருட்கள்
இதில் டைஹைட்ரோ
டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின்
போன்றவை காணப்படுகின்றன.
விஷ
ஜூரத்திற்கு மருந்து
இம்மரத்தின் உலர்ந்த
பழங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. வைரத்தை வைரத்தால் அறுப்பதைப் போல விஷ சுரத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகள்
தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது
இலை மற்றும் பழங்களிலுள்ள
டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின்,
ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும்
பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன. இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க
பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த
மருந்தாக பயன்படுகிறது. இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.
பற்களை
பாதுகாக்கும்
இதன் இலைகளை மையாக
அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள
இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து
புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல்
கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள
கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.
No comments:
Post a Comment