Wednesday, 20 November 2019

சொர்க்க மரம்

லட்சுமி மரம், சொர்க்க மரம் மற்றும் சிமரூபா மரம் 

மரங்கள், இயற்கையின் அதிசயங்கள், ஒவ்வொரு மரத்துக்கும், ஒவ்வொரு குணாதிசயம் உண்டு, சில மரங்கள், குளிர்ச்சியான சூழலில் மட்டும் வளரும், சில வெப்பமண்டலத்தில் மட்டுமே வளரும், சில சமவெளிகளில் வளராமல், உயரமான மலைகளில் மட்டும் வளரும், இது போன்று, ஏராளமான மரங்கள் உண்டு, உலகில். சமவெளிகளில், மற்றும் அனைத்து மண் வகைகளிலும், வளரும் ஒரு மரம் தான், சைமரூபா மரம். வெளிநாடுகளில் வளர்ந்த மரம், நமது தேசத்தில், கேரள, கர்நாடக மாநிலங்களில் அதிக அளவில் வளர்க்கப் படுகிறது. ஆண்டு முழுவதும் பசுமையாகக் காணப்படும் சைமரூபா மரம், மண்ணை வளப்படுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை சீராக்கும். அதோடு மட்டுமல்லாமல், காற்றில் உள்ள கார்பனை கிரகித்து, அதிக அளவில் பிராண வாயுவை வெளிப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாத்து, பூமி வெப்பமாவதைக் குறைக்கும் மரம். மனிதர்களுக்கு நல்ல காற்றை அளிக்கும் மரம், என்று பல சிறப்புகள், சைமரூபா மரத்துக்கு இருக்கிறது. பொதுவாக, விதைகள் மூலம் வளரும் சைமரூபா மரம், விதைத்து மூன்றாண்டுகளில், பூக்கும் பருவத்தை அடையும். அடுத்த சில ஆண்டுகளில், காய்க்க ஆரம்பிக்கும். நீண்ட கிளைகளில், அடர் பச்சை வண்ணத்தில் செழுமையான மாவிலைகள் போன்றத் தோற்றத்தில் இலைகளைக் கொண்ட இந்த மரங்களின் காய்கள், கரு நீல வண்ணத்திலோ அல்லது இளஞ்சிவப்பு வண்ணத்திலோ காணப்படும். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் லட்சுமி தரு மரத்தின் பயன்கள் சைமரூபா மரத்தின் விதைகள் மிக்க நன்மைகள் தருவதாக இருந்தாலும், இந்த மரத்தின் அனைத்து பாகங்களுமே, மனிதர்களுக்குப் பயன்படுகின்றன. இதன் விதைகளில் இருந்து, உணவில் பயன்படுத்தக் கூடிய செயற்கை நெய் தயாரிக்கப்பட்டு, அமெரிக்க நாடுகளில் மக்கள் வீடுகளில் உபயோகப் படுத்துகிறார்கள். மருந்துப் பொருட்கள், இயற்கை சோப் தயாரிப்பு, மெழுகு, சாயம் மற்றும் எண்ணைத் தயாரிப்பில், இந்த மரத்தின் விதைகள் பயன்படுகின்றன. பண்படுத்தப்பட்ட இதன் புண்ணாக்கு, சிறந்த கால்நடைத் தீவனமாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுகிறது பழச் சாறு தயாரிப்பு : விதைகள் எடுக்கப்பட்ட காய்களின் தோல்களில் இருந்து, காகித அட்டைகள் செய்யப் படுகின்றன. பழங்களின் சதைப்பகுதிகள், பழச்சாறுகள் .மற்றும் ஆல்கஹால் தயாரிப்பில் பயன்படுகின்றன. இதன் காய்ந்த இலைகள் மண்ணுக்கு, இயற்கை உரமாக அமைகிறது. சைமரூபா மரத்தின் வேர்ப் பட்டைகளில் இருந்து, வைரஸ் நச்சுக்களால் ஏற்படும் வயிற்றுப்போக்கைத் தடுக்க, மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.


No comments:

Post a Comment