Friday 22 November 2019

சரக்கொன்றை மரம்


சரக்கொன்றை மரம் 

தங்க நிற மலர்களுடைய கொன்றை மங்களகரமான மரம். திருத்துறையூர், திருப்பந்தணை நல்லூர், திருஅச்சிறுபாக்கம், திருக்கோவலூர் முதலிய பதினைந்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் தலமரமாக கொன்றை விளங்குகிறது. வன்னிக்கு அடுத்தபடியாக அதிகமான திருக்கோயில்களில் தலமரமாக அமைந்துள்ளது.

சமஸ்கிருத மொழியில் கொன்றையின் பெயர் குண்டலினி ஆகும். தங்க மலர்களில் சுருண்டு இருக்கும் மகரந்த்தாள்கள் பாம்பாக உருவமுள்ள குண்டலினி சக்தியின் இருப்பிடம் என்று கருதப்படுகிறது. ஏப்ரல் மாதம் முழுவதும் மரத்தில் கொத்துக்கொத்தாக மஞ்சள் வண்ணத்தில் பூத்திருக்கும் கொன்றை மலர்கள் பார்க்க பார்க்க அழகு மிளிரும். இதற்கு சித்திரைக் கனிப்பூ என்ற பெயரும் உண்டு.

இந்தியாவில் தோன்றிய கொன்றை மரம் தற்போது ஸ்ரீலங்கா,மொரிசியஸ், தென்ஆப்ரிக்கா, பிரேசில், போன்ற தேசங்களிலும் காணப்படுகிறது. நீள் சதுரமான கூட்டிலைகளையும் சரஞ்சரமாய்த் தொங்கும் பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூங்கொத்துகளையும் நீண்ட உருளை வடிவக் காய்களையும் உடைய இலையுதிர் மரமாகும். தமிழகமெங்கும் இயற்கையாக வளர்கிறது.
இதன் வேர், பட்டை, இலைகள், விதைகள், மருத்துவ குணம் கொண்டவை. பழம் பழுத்துவர விதைகள் ஒன்றைவிட்டு ஒன்றாக பிரிந்து விடும். ஒரு செல் மாத்திரம் இருந்த பழம் பல செல்களாகும். கொன்னை தோல் வியாதிகள், உடல்பருமன், கொலஸ்ட்ரால் குறைப்பு இவற்றுக்கு அருமருந்து, குஷ்டம், வெண் குஷ்டம், போன்ற சர்ம வியாதிகளுக்கு மருந்தாகப் பயன்படும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

கொன்றையில் டேனின், ஆந்தராகுவினோன், ரெயின், எமோடின், ஸ்டிராய்டுகள், பிசின், எளிதில் ஆவியாகும் எண்ணெய், ஆல்கலாய்டு போன்றவை காணப்படுகின்றன.


இலையை அரைத்து படர்தாமரைக்கு பூசலாம். கொன்னை இலைகொழுந்திலிருந்து பிழிந்த சாற்றில் 150 மில்லி கிராம் எடுத்து சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ள, கிருமி, திமிர்ப்பூச்சி மலத்துடன் வெளியேறும். கொழுந்து இலைகளின் கூழுடன் 5-15 கிராம் மோருடன் 1 மாதம் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும்.இதே போல் பூவுடன், மோர் சேர்த்து உட்கொள்ள, வயிற்றுப்புண்கள் குணமாகும். இத்தனை பலன்களைத் தரும் கொன்றை மரம் ராஜமரம் என்று ஆயுர்வேதத்தில் குறிப்பிடுவது ஆச்சரியமல்ல.
வலிகளைக் கொல்லும் கொன்னை பூவுடன், பழச்சாறு விட்டு அரைத்து, உடம்பில் தேய்த்து குளிக்க, தேமல், சொறி, கரப்பான் நீங்கும். பூவை குடிநீரில் சேர்த்து குடிக்க வயிற்றுவலி, குடல் நோய்கள் நீங்கும்.பூவை தேனில் ஊறவைத்து கொடுக்க மலத்தை இளக்கி வெளியேற்றும். பாலுடன் பூவைக் கலந்து காய்ச்சி உண்ண உள் உறுப்புக்களை வலிமைப்படுத்தும். மெலிந்தவர்களுக்குப் பலன் தரும்.

கொன்னை மரப்பட்டை வலிகளை குறைக்கவும், தொற்றுநோய்கள் அண்டாமலும் தாக்கும்.மரப்பட்டையின் கசாயம் 60 மிலி தேன் 5 மிலி கலந்து ஒரு நாளைக்கு இருவேளை 1-2 மாதங்கள் உட்கொண்டு வர கொலஸ்ட்ரால் அதிக உடல்பருமன் குறையும். மரப்பட்டை கூழ் 15 கிராம் அளவில், 1 மாதம் உண்டுவர மூட்டுவலி, வயிற்றுப் பூச்சிகள் நீங்கும் கிருமி நாசினி.

 கொன்னை பழம் உலர வைத்தது பாதுகாப்பான மலமிளக்கி. பறிக்கப்பட்ட பழங்கள் வெய்யிலில் காயவைத்து பிறகு பழக்கோது பிரிக்கப்பட்டு காற்றுப்புகாத குப்பிகளில் அடைத்து வைக்கப்படும். பின்னர் மண்ணடியில் 7 நாள் வைக்கப்படுகின்றன.

பழக்கதுப்பு சிறப்பான கிருமி நாசினி. நுண்ணுயிர் நாசினி. பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கும் சக்தி உடையது. இதயத்திற்கு டானிக், நீரிழிவு, மூட்டுவலி, மலச்சிக்கல், கல்லீரல் வீக்கம் இவற்றிர்க்கு மருந்தாகப் பயன்படுகிறது. கொன்னையின் மற்ற பாகங்களை விட, பழக்கதுப்பு, சிறந்த கிருமி நாசினி.



No comments:

Post a Comment