Monday, 18 November 2019

எட்டி மரம்


எட்டி மரம்



எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர்கூடியது. இதன் இலை பச்சையாக 2 அங்குல அகலத்தில் 5 - 9 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா. தென் அமரிக்கா, மற்றும் பர்மா, சைனா, கிழக்கிந்தியா, தாய்லாண்டு, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலெசியா(மலேயா) இந்தியா போன்ற நடுகளில் பரவலாக உள்ளது. இலை வேர் காம்பு,பட்டை விடத் தன்மை உடையது. உயிரையும் கொல்லும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும். இது விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.


 
மருத்துவப் பயன்கள் -: 

இதன் பொதுவான குணம். நிறு நீரைப் பெருக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, குடல் எரிச்சல், இருதயவயாதி, இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணரல் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

எட்டிமரத்தின் வடபாகம் செல்லும் வேரை உரித்த பட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்யவும். தும்பை இலை+சிவனார் வேம்பு சம அளவு கசாயத்தில் 2 கிராம் இந்தச் சூரணத்தைப் போட்டு உள்ளே கொடுக்க பாம்பு முதலான நச்சு  தீரும். மேலும் 2-3 நாள் கொடுக்க வேண்டும். கடி விட வலி, வீக்கம் குணமாகும்.

இதன் பொடி இரு கிராம் அளவு உப்புடனோ, வெற்றிலையுடனோ தின்ன தேள்கடி விடம் தீரும்.

வேர்ப்பட்டை 20 கிராம் 200 கிராம் மி.லி.நீரில் போட்டுக் காச்சி குடி நீராக மூன்று வேளை கொடுக்க காலரா,வாந்தி, பேதி குணமாகும்

இதன் சூரணத்தை வெந்நீரில் 1-2 கிராம் கொடுக்க வாத வலி, இசிவு தீரும்.

மரப்பட்டை 10 கிராம் 100 மி.லி.எள் நெய்யில் போட்டுக் காச்சி மேலே தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும்.

இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும்.

இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் மத்தித்துப் பூச கட்டிகள் கரையும். வெப்பக்கொப்புளம் குணமாகும்.

No comments:

Post a Comment