வாகை மரம்
பண்டைய தமிழகத்தில் போர் வீரர்கள் வெற்றியின் அடையாளமாக இந்த மரத்தின் பூக்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் அந்த காலத்தில் இந்த மரத்தின் பூவை வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்பட்டது.
ஆடு, மாடுகள் இதன் இலைகளை விரும்பி சாப்பிடும். அதனால் தீவனமாக இதை பயன்படுத்துவதும் உண்டு.
வாகைப் பூவை சேகரித்து நீர்விட்டுக் காய்ச்சி பாதியளவாக வற்றியதும் வடிகட்டி குடித்து வர, வாத, பித்த நோய்களை குணமாக்கும்.
வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால், வாய்ப்புண் குணமாகும்.
விஷங்களை முறிக்கும் தன்மை கொண்ட வாகை இலையை அரைத்து கண் இமைகளின் மீது வைத்து கட்டி வர கண் சிவப்பு கண் எரிச்சல் குணமாகும்.
வாகை மரங்கள் வணிகரீதியாகவும் அதிகப் பலன் தருபவை. மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், ஓடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைத்தாலே… 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும்.
அத்துடன் ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது.

இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.
வாகை மரம்… மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களைத்தான் சூடுவார்கள். அதனால்தான் ‘வெற்றி வாகை’ என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
ஆடு, மாடுகளுக்குத் தீவனம், நிலத்துக்குத் தழையுரம், வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்ற பலன்களோடு… மண்ணரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது இந்த வாகை. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரும் தன்மையுடைய இந்த மரம், நமது தோட்டத்தில் இருந்தால்… அது, வங்கியில் போட்டு வைத்த வைப்புநிதிக்கு ஒப்பானது.
முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும் இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. வாகை மரத்தின் பட்டையை நிழலில் உலர்த்தி பொடித்து, பாலில் கலந்து குடித்து வந்தால்… பசி எடுக்காத பிரச்னை தீரும், வாய்ப்புண் குணமாகும். இதன் பூக்களை நீர் விட்டு பாதியாகச் சுண்டும் அளவுக்குக் காய்ச்சிக் குடித்தால், வாதநோய் குணமாகும். விஷத்தையும் முறிக்கும்.
வாகை மரங்கள் வணிகரீதியாகவும் அதிகப் பலன் தருபவை. மானாவாரி நிலங்களில் வளர்க்க மிகவும் ஏற்றவை. தனிப்பயிராக வளர்க்காவிட்டாலும், வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைத்தாலே… 10 ஆண்டுகளில் நல்ல வருவாய் கிடைக்கும். அத்துடன் ஒரு மரம், ஓர் எருமையின் வருடாந்திரத் தீவனத் தேவையில் 20% அளவையும், ஒரு பசுவின் தீவனத் தேவையில் 30% அளவையும் தீர்க்கவல்லது. இதன் இலையில் உள்ள புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் கால்நடைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. உலர்ந்த வாகை இலையில் 2.8% நைட்ரஜன் உள்ளதால், இதைச் சிறந்த தழையுரமாகவும் பயன்படுத்தலாம்.
வாகை அனைத்து மண்ணிலும் சிறப்பாக வளரும். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம்… என அனைத்து வகை நிலங்களிலும் வளரும். தவிர, 0.11%
உப்பும், கார, அமில நிலை 8.7 உள்ள நிலங்களிலும்கூட இது வளரும். நிலங்களில் இந்த அளவுக்கு மேல் களர் தன்மை இருந்தாலும், நடவு செய்யும் முன் குழியில் ஒரு கிலோ ஜிப்சம், ஒரு கிலோ தொழுவுரத்தை இட்டு, நடவு செய்தால் போதும்.
No comments:
Post a Comment