Friday, 22 November 2019

செம்மரம்


செம்மரம்
இந்த மரங்கள் நன்கு உயர்ந்து வளரக்கூடியவை. இருந்தபோதும் வைரக்கட்டை (மரத்தின் உட்பகுதி) மட்டுமே அதிகப் பயனளிப்பதால், அதைப் பெறுவதற்காக மொத்த மரமுமே வெட்டப்படும் அழிவு அறுவடை (destructive harvesting) தவிர்க்க முடியாத ஒன்று. இதன் காரணமாகச் செம்மரம் ஏறத்தாழ அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. உலக அளவில் மிகவும் ஆபத்தான நிலையில் (Critically Endangered) உள்ள தாவரமாக, .யு.சி.என். (IUCN)என்ற பன்னாட்டு உயிரினப் பாதுகாப்பு நிறுவனம் செம்மரத்தை வகைப்படுத்தியுள்ளது


கடந்த இருபது – முப்பது ஆண்டுகளாகச் சட்டத்துக்குப் புறம்பாகச் செம்மரங்கள் (Pterocarpus santalinus) வெட்டப்படுவதும் கடத்தப்படுவதும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் உள்ளன. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தவை. முதல் காரணம், செம்மரங்களின் மிகக் குறுகிய விரவல் பரப்பு (distribution area), இது எண்டமிக் (Endemic) எனப்படும் ஓரிடவாழ்வித் தாவரம். அதாவது, கிழக்கு மலைத்தொடருக்கு மட்டுமே உரித்தான இயல் (Wild) தாவரம்.
இந்த மலைத்தொடரிலும்கூட ஆந்திரத்தின் தெற்கில் சில பகுதிகளில் மட்டும், இது சிதறிக் காணப்படுகிறது. நல்லமலையின் தெற்குப் பகுதி, சேஷாசலம் மலை, நிகழ மலை, வெள்ளிகொண்டா மலை, அத்துடன் ஆந்திரத்தை ஒட்டிய தமிழகக் கிழக்கு மலைத் தொடரின் வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சேலம், தருமபுரி பகுதிகளில் செம்மரம் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஆந்திரத்தின் ராயலசீமா பகுதியில்தான், இது முக்கியமாகக் காணப்படுகிறது
மண்ணின் தன்மை :

🍒 செம்மண், செம்மண்ணில் கல் கலந்த காடு (GRAVE SOIL) போன்ற இடங்களில் சிறப்பாக வளரும்.

🍒 மேட்டுப்பாங்கான நிலங்களில் சிறப்பாக வளரும், உதாரணமாக: வறண்ட வனப் பகுதிகளைக் கூறலாம்.

🍒 மேட்டுப்பாங்கான இடங்களில் மழைநீரை சிறப்பான முறையில் அறுவடை செய்தல் மிகவும் அவசியம்.

🍒 (உதாரணமாக: உயரமான வரப்புகள் அமைத்துக் கொள்ளுதல், குறிப்பாக ஒவ்வொரு மரத்திற்கும் இவை செயல் முறைபடுத்திட வேண்டும். மழை நீரை முழுமையாக அறுவடை செய்திட வேண்டும் என்பதே இதன் பொருளாகும்)

நடவு செய்தல் மற்றும் பாதுகாப்பு :

🍒 பருவகால மாதத்தில் முதல் மழைக்கு முன்பாக சுமார் 3 அடி குழி எடுத்துக் கொண்டு, இரண்டாவது மழைக்கு முன்பாக நடவு செய்திட வேண்டும்.

🍒 இதற்கு உயிர் நீர் அவசியமானது (மழை கிடைக்காத போது), இரண்டு மாதம் வரை பராமரிப்பு செய்தல் வேண்டும் (மண்ணில் ஈரப்பதம் இருக்கும் அளவு பார்த்துக் கொண்டால் போதுமானதாகும்).

🍒 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் ஒரு நாற்று நடவு செய்யலாம். சுமார் 400 நாற்றுகள் 1 ஏக்கருக்கு தேவைப்படும். சுற்றிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.

உர மேலாண்மை :

🍒 மரம் ஒவ்வொன்றிற்கும் மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, தொழு உரம் வைத்து நன்கு பராமரிப்பு செய்ய வேண்டும்.

🍒 கற்பூர கரைசலைத் தெளித்து வந்தால் எந்த விதமான பூச்சித்தாக்குலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

🍒 செடிகளின் வளரும் பருவத்தில் பஞ்சகாவியம், அமிர்த கரைசல் கொடுப்பின் நல்ல திடமான மரத்தைப் பெறலாம்.

20 - 25 வருடம் வரை வளர்க்க வேண்டும். 20 வருடம் ஆன மரத்திற்கே மருத்துவ குணம் உருவாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள  வேண்டும்.

No comments:

Post a Comment