Friday 22 November 2019

வேங்கை மரம்


வேங்கை மரம்

இடி, மின்னல் மற்றும் கதிர்வீச்சுகளில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும், மனித ரத்தம் போல சிவப்பு நிறத்தில் பால் வடியும், பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த உதிர வேங்கை மரங்கள் உள்ளன. சேலம் மாவட்டம், பாலமலையில், பல்வேறு அரிய மூலிகை தாவரம் மற்றும் மரங்கள் உள்ளன. அழிவின் விளிம்பில் உள்ள அரிதான உதிர வேங்கை மரங்களும் இதில் அடங்கும். முதிர்ந்த உதிர வேங்கை மரத்தின் தண்டு பகுதியை வெட்டினால், மனிதர்களின் ரத்தம் போல, பால் போன்ற பிசின் வருவதோடு, மஞ்சள் நிறத்தில் காணப்படும் பூக்களின் மேல், சிறுத்தை உடலில் உள்ள புள்ளிகள் போல காணப்படுகின்றன. இதனால், இந்த மரத்துக்கு, 'உதிர வேங்கை' மரம் எனப் பெயர்.
சித்த மூலிகை வைத்தியர் குப்புசாமி கூறுகையில், ''வேங்கை மரம் உள்ள பகுதியில், மின்னல் தாக்காது. மோசமான கதிர் வீச்சுகள், இடி, மின்னலில் இருந்து பாதுகாக்கும் சக்தி, வேங்கை மரத்துக்கு இருப்பதால், பழங்கால கோவில்களின் கொடிமரம், கதவுகளை, முன்னோர், வேங்கை மரத்தில் அமைத்தனர்,'' என்றார்.
மேட்டூர் சித்த மூலிகை பண்ணை ஆராய்ச்சியாளர் சுப்ரமணியன் கூறியதாவது: உதிர வேங்கை மரத்தின் தாவரவியல் பெயர், 'பிட்ரோடர்டஸ்!' மரத்தின் சிவப்பு நிற பிசின் உலர்ந்ததும் கருப்பாகி விடும். இந்த பிசினை குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டாக வைப்பர். இதனால், தோல் நோய் வராமல் தடுக்க முடியும். தற்போது இந்த மரங்கள் வனப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. நிலப்பகுதியில் அரிதாகவே காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment