Monday 18 November 2019

அத்தி மரம்


அத்தி மரம்

ஒரு இடத்தில் அத்தி மரம் இருக்கிறதென்றால் அதற்கு கீழே நீரோட்டமும் நன்றாக இருக்கிறது என்பது அறிகுறி. பூமிக்கு அடியில் நீரூற்று, நீரோடை குறைந்த அடிகளில் இருக்கும் என்ற ஐதீகமும் உண்டு. இதனை நாங்கள் பரிசோதித்தும் பார்த்திருக்கிறோம்.

அத்திப் பழத்தில் செய்த சிலவற்றை எல்லைத் தெய்வங்களுக்கு, சக்தி பீடங்கள் என்று சொல்வார்களே காஞ்சி காமாட்சி, ஆதிசங்கரர் செய்த சக்தி 108 சக்தி பீடங்களில் உள்ள அம்பாளுக்கு நெய் வேத்தியமாக அதனை பயன்படுத்துவார்கள். அத்தி பழத்தில் அடை மாதிரி தட்டி அதனை நெய் வேத்தியத்திற்குப் பயன்படுத்துவார்கள். இதுபோன்று அம்பாளுக்கு வைப்பதன் மூலம் நிறைய சக்தி கிடைக்கும் என்பது போன்றும் உண்டு.
அடுத்து, மதுரையில் கம்ப ராமாயத்ணதை அரங்கேற்றம் செய்தார்களே, அது இந்த அத்தி மரத்தில் வைத்துதான் செய்தது. சரியானதா, தகுதியானதா, தரமானதா இருந்தால் அந்த ஓலைச் சுவடி கட்டு அத்தி மரப் பலகையில் நீடிக்கும், இல்லையென்றால் மூழ்கிவிடும். இதுபோன்ற தெய்வீகச் சக்தி உடையதும் இந்த அத்தி.

இதில் அத்திப்பூ பூப்பதே தெரியாது. அதனால் அத்தி மரப் பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உடம்பு நன்றாக விருத்தியாகும். ரத்த விருத்தியெல்லாம் கொடுக்கும். அத்திக்காய், அத்திக்காய் பிஞ்சு இதையெல்லாம் பொரியல் செய்து சாப்பிட்டால் எல்லா சக்தியும் கிடைக்கும். குறிப்பாக தசை இறுகும். சிலருக்கு தொங்கு தசை இருக்கும். அதெல்லாம் நீங்கி, எலும்பு வலுப்பெறும்.
அதேபோல, அத்தி மரப்பலகையில் உட்கார்ந்து சில செயல்கள் செய்தால் அந்தச் செயல் நீடிக்கும். தோஷங்கள் நீங்குவதற்கு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பார்கள். அதைவிட அத்தி இலை கொடுத்தால் மிகவும் விசேஷம். எல்லா தோஷமும் நீங்கும். அத்திப் பழத்தைச் சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் முடி வலுவடைந்து வளர்வதற்கும் பயனுள்ளதாக இருக்கும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகளையும் நீக்கும். விட்டமின் , பி, சி, டி என்று எல்லாமே இருக்கிறது. அதனால் அத்தி மரம் என்பது அவ்வளவு விசேஷமான மரம்.
அதனால் அத்தி மரத்தை நட்டு, அதைப் பராமரித்து அதில் கிடைக்கக் கூடியதையெல்லாம் எடுத்து சாப்பிட்டு வந்தால் அது நல்லது. தவிர, தோஷ நிவர்த்தியாகவும் அது இருக்கிறது. கணவன், மனைவி பிரிந்தவர்களையும் அது சேர்க்கும். எல்லா வகையிலும் பலமானதாக இருக்கும். இதுபோன்ற அமைப்புகள் இதற்கு உண்டு.

No comments:

Post a Comment