மகோகனி மரம்
உழுதவன்
கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது" என்பார்கள். தற்போதைய சூழலில் இந்தப் பழமொழி தமிழக விவசாயிகளுக்கு சாலப்
பொருந்துகிறது. வறட்சி,
வெள்ளம், இடுபொருள் விலையேற்றம், கூலி
ஆட்கள் கிடைக்காதது, உற்பத்திச்
செலவு அதிகரிப்பு, நோய், பூச்சித் தாக்குதல் உள்ளிட்டவற்றையெல்லாம் தாண்டி
விளைச்சல் கிடைத்தால், அதற்குரிய விலை கிடைப்பதில்லை.
பல இடங்களில் விளை பொருளை அறுவடை செய்யாமல் விடுவதும், சாலையில் கொட்டிப் போராடுவதும் தொடர்கிறது. இதனால் அடுத்த தலைமுறையினர் விவசாயத்தை மேற்கொள்வதில் பெரும் தயக்கம் காட்டுகின்றனர்.இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, `ஆப்பிரிக்கா மகோகனி` உதவும் என்கிறார்,
வறட்சிக்கு தென்னை மரம் தாங்காது. ஆனால், மகோகனி மரங்கள் தாங்கும். நம் உள்நாட்டுத் தேவைக்காக மரங்களை இறக்குமதி செய்யும் நிலையில் நாம் இருக்கிறோம். மகோகனி வளர்ப்பு, நம் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதிக்கும் வழிவகுக்கும். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில்
இந்த மரத்துக்கு பெரிய அளவில் சந்தை உள்ளது. இந்த மரம் வளர்ப்பதால், புவி வெப்பமயமாதல்
தடுக்கப்படும்" என்ற குமாரவேல், "நான் செடி வியாபாரம் செய்யவில்லை. நியாயமான, நம்பகமான நபர்கள் மூலம், விவசாயிகளுக்கு லாபம் தரும் மரக்கன்றுகள் கிடைக்க வழிவகை செய்கிறேன். கிராமப் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்கும் விவசாயிகளின் நலனே எனக்கு முக்கியம்" என்றார் உறுதியுடன்.
மருத்துவ குணம் நிறைந்த மகோகனி
"ஆப்பிரிக்கா மகோகனி மரத்தின் பட்டைகளுக்கு மருத்துவக் குணமும் உண்டு. 1890-ல் பிரான்ஸ் நாட்டில் `அமிபியாஸ்` எனப்படும் வயிற்றுப்போக்கால் பலர் உயிரிழந்த நிலையில், மகோகனி மரத்தின் பட்டைகள் மருந்தாகப் பயன்பட்டுள்ளன.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் இந்த மரத்தை நடவு செய்யலாம். காற்றின் வேகத்தை இவை தாங்கி நிற்கும்.. இவற்றுக்கு தொடர்ச்சியாக நீர் பாய்ச்சாவிட்டாலும் மரம் காய்ந்து போகாது.
எனினும், அதிக தண்ணீர் இருந்தால், வளர்ச்சி வேகமாக இருக்கும். வேறெந்த பராமரிப்பும் இல்லாமலே, 10 ஆண்டுகளில் 120 செ.மீ. சுற்றளவு கொண்ட பெரிய மரமாகவும், உயரமாகவும் இது வளரும்.
|
No comments:
Post a Comment