Friday, 22 November 2019

வாழை மரம்


வாழை மரம்

வாழையடி வாழையாக வாழ்வோம் 

மனித வாழ்வில் இன்றியமையாத ஒரு அங்கமாகவே இருந்துவருகிறது வாழை. வாழைமரத்தில் அனைத்துப் பாகங்களும் பயன்படுகிறது என்பதை ஆதிநாள் முதலே மனிதன் கண்டறிந்துகொண்டான். அதனால்தான் எந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருந்தாலும் வாழைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மணப்பந்தலில் வாழை, மரண வாசலிலும் வாழை.. என ஒவ்வொரு நல்லது கெட்டதிற்கும் வாழையைப் பயன்படுத்துவதன் மூலம் வாழையின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம். இத்தகைய வாழை மரத்தின் பாகங்கள் நமக்கு எவ்வாறெல்லாம் பயன்படுகிறது? அதன் மருத்துவ குணங்கள் என்னென்ன?


வாழை இலையில் சாப்பிடுவது நல்லதா? இது என்னங்க கேள்வி... எல்லா வீட்டு விஷேசங்களுக்கும், பொது விழாக்களுக்கும் வாழை இலைதானே பயன்படுத்துகிறோம் என்கிறீர்களா? நீங்கள் நினைப்பதும் சரிதான்.

இன்றையச் சூழலில் வாழையிலைச் சாப்பாடு என்பது மிகவும் அருகிவிட்டது. ரெடிமேடாக தயாராகிய பிளாஸ்டிக் தட்டுகள்,பிளாஸ்டிக் டம்ளர் போன்றவையே பல நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரோக்கிய கேட்டை விளைவிக்கும். வாழையின் மகத்துவத்தை கொஞ்சம் பார்ப்போமே


வாழைப்பழம் விளைவிப்பதில் உலகிலேயே உச்சத்தில் நிற்பது நமது இந்தியாதான். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 170 லட்சம் டன் வாழைப் பழம் உற்பத்தி செய்யப்படுகிறது.வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி எனற எதுவும் வீணாகாது.வாழை ஆசியாவில் தோன்றியது என்றாலும், அது மற்ற வெப்ப மண்டலக்கண்டங்களான ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா போன்றவற்றுக்குப் 
பரவியது.

வாழைபழ வகைகள்

செவ்வாழை

ரசுதாளி

தேன் வாழை

மலை வாழை

பேயன் வாழை

பச்சை வாழை

மொந்தன் வாழை

பூவன் வாழை

கதலி வாழை

ஏலரிசி வாழை

மோரீஸ் வாழை 

மேலும் பல வகைகள் உள்ளன.


வாழையின்  பாகங்கள் :

வாழைப்பூ

இழைகள் 

தண்டு

நார்

தாள்


வாழையின் பயன்கள்:


நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த வாழை இலை. ம்முடைய பண்பாடு மற்றும் உணவு முறையில் பெரும் பங்கு வகிக்கும் இந்த வாழை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது.


வாழை மரத்தில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை தருகிறது. வாழை மரத்தில் உள்ள வாழை இலை,வாழைப் பழம், வாழை பூ, மற்றும் வாழை தண்டு என அதனுடைய அனைத்து உறுப்புகளும் நமக்கு மருதத்துவ குணங்களை தருகிறது.



நாம் உட்கொள்ளும் உணவை வாழை இலையில் பரிமாறும் போது நமக்கு ஏராளமான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன. இதற்க்கு காரணம் நாம் சூடாக உணவுகளை பரிமாறும் போது வாழை இலையில் உள்ள ஊட்ட சத்துக்களை உணவு பொருட்கள் உறிஞ்சுகின்றன.


நாம் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கு கண் பிரச்சனைகள் வராமல் பார்த்து கொள்ளலாம். இதில் உள்ள ஊட்ட சத்துகள் நமக்க  தேவையான வைட்டமின்களை தருகிறது. எனவே நமக்கு மாலை கண் வரும் அபாயம் தடுக்க படுகிறது.


குழந்தையை அதிகாலையில் சூரிய ஒளியில் காட்டும் போது வாழை இலையில் இன்ஜி எண்ணையை தடவி சூரிய ஒளி படும்படி வைப்பதால் குழந்தைக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே இதனை தவறாமல் செய்வதால் குழந்தையின்  சரும பிரச்சனைகள் நீங்கும்.


வாழை இழையில்  சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி நம்முடைய சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நம் தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனை 

தொடர்ந்து செய்வதால் நமக்கு தோல் அரிப்பு ஏற்படுவது தடுக்க படுகிறது.


தீக்காயம் ஏற்பட்டால் வாழை இலையில் தான் படுக்கவைப்பார்கள். இதற்க்கு காரணம் வாழை இலையில் உள்ள குளிர்ச்சி சக்தி தான். வாழை இலை வெப்பத்தை வெளிப்படுத்தமல் இருக்கும். எனவே வாழை இலையில் இன்ஜி எண்ணையை ஊற்றி நம்முடைய தீக்காயம் உள்ள இடத்தில் வைத்தால் நமக்கு விரைவில் காயம் சரியாகும்.


நாம் தினமும் வாழை இலையில் உணவுகளை உண்பதால் நமக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் எளிதில் கிடைக்கின்றன.இதனால் இளம் வயத்தில் ஏற்படும் இளநரை பிரச்சனை நீங்கும். மேலும் முடி உதிர்தலும் தடுக்கப்படும்.


வாழை இலையில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. எனவே தினமும் வாழை  இலையில் உணவு உண்பது நல்லது.

வாழை இலையில் உணவுகளை கட்டி எடுத்து செல்வதால் நம்முடைய உணவு கெட்டு போகாமல் இருக்கும்.இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்கள் இருப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

No comments:

Post a Comment