பனை மரம்
தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை பனை மரம்
பனை மரம் ஏன் கற்பக தரு என அழைக்கப்படுகிறது?
கற்பக தரு எனப்படுவது எது வேண்டுமென்று நினைக்கிறோமோ அதைத் தரக்கூடிய தேவலோகத்து மரம் என இந்துமத புராணக் கதைகளில் கூறப்படுகிறது. கற்பக
தரு பற்றிய கதைகள் யாவுமே புராணங்களோடே நிற்கின்றன.
ஆனால் மண்ணுலகில் கற்பக தரு என்றால் அது பனை மரம் தான். ஏனெனில் பனை மரத்தின் சகல பாகங்களுமே மனிதருக்கு பயனைத் தரக்கூடியது என்பது மட்டுமன்றி கிடைத்தற்கரிய மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளன. பனை
மரத்தின் எந்தப் பாகமுமே பயனற்றுப் போவதில்லை. ஆதலால் பனை மரம் கற்பக தருவாக காணப்படுகின்றது.
”விதைத்து கொண்டே இரு முளைத்தால் மரம் : இல்லையேன்றால் உரம்”
என்பதற்கு ஏற்ப, மரங்கள் இன்றி மனிதர்கள் இல்லை என்பது இன்றைய மனிதர்களுக்குப் புரியவில்லை. ஆனால்,
நமது முன்னோறோர்கள் தெளிவாக புரிந்து, மரம்
வளர்த்தார்கள். இயற்கையின் அந்தனை செயல்பாடுகளும் சரியாக இருந்தது.
பனை மரம் ஆண் பனை, பெண்
பனை, கூந்தல்பனை உள்ளிட்ட பல பெயா்களில் அனைத்து நிலப்பரப்பிலும் வளர்ந்து வருகிறது. பனை
மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன் தருகிறது. பொதுவாக பனை மரங்களில் சுமார் 60 முதல்
70 வருடங்களுக்குபின் முதிர்ச்சி பெற்றதும் மரத்தின் மேல்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிப்பு ஏற்பட்டு இலைகளும், பூக்களும் வெளிவரும். இந்த
பூக்களில் இருந்து காய்கள் காய்த்து கொத்து கொத்தாக கீழே கொட்டுவது வழக்கம்.
இவ்வாறு பூக்களில் இருந்து காய்கள் வெளியாகும்போது பல்வேறு ஒலிகள் ஏற்படும். முதிர்ச்சி அடைந்த பனைமரங்கள் குலைகள் தள்ளி, பூக்களுடன் காய்களை வெளித்தள்ளும் பனைமரத்தினை கூந்தல்பனை என்று அழைக்கின்றனர். பனைமரங்கள் அனைத்தும் இதுபோன்று கூந்தல்பனைமரமாக மாறுவது கிடையாது.
ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு விதையை இந்த மண்ணில் விதைத்துக் கொண்டே இருங்கள். அதிலும் குறிப்பாக தமிழர் இனத்தின் தேசிய மரம் பனையாகும். அந்த
பனை மரங்கள் இன்றைக்குத் தமிழகத்தில் கிட்டத்தட்ட அழிந்தே விட்டது எனலாம். அவ்வளவு வேகமாக பனை மரங்கள் இந்த மண்ணை விட்டு மறைகிறது. அதை
மீட்க வேண்டியது தமிழர்களான நமக்கு மிகப் பெரிய கடமை ஆகும்.
இனி பனை மரத்தின் பயன்பாடுகள் பற்றி பார்ப்போம்...
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.
பணங்கற்கண்டை
ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை நீங்கும்.
பனங்கிழங்கிற்கு
உடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் அதிகரிக்கும்.
பதநீர் மகிமை: பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி,வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, தினமும் மூன்று முறை மரம் ஏறி,அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு சேர்த்தால் பதநீர் ரெடி.
சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி கட்டிவிட்டடுவாங்க. இதனால் மரத்திலிருந்து பானையை இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.
இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்.
சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதநீர் என்று பெயர். மேக நோய் இருப்பவர்கள்
இதை 40 நாட்களிடைவிடா அது அருந்தி வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு,ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு. பனை நுங்கு கோடை காலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும் ஏற்றது.
பனங்கிழங்கை
உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய் உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல் பருமன் ஆகும். பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து புண்களின் மீது பூச ஆரும்
பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும்பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன அவைகள்...
பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன.
1. ஆண் பனை,
2. பெண் பனை,
3. கூந்தப்பனை,
4. தாளிப்பனை,
5. குமுதிப்பனை,
6.சாற்றுப்பனை,
7. ஈச்சம்பனை,
8. ஈழப்பனை,
9. சீமைப்பனை,
10. ஆதம்பனை,
11. திப்பிலிப்பனை,
12. உடலற்பனை,
13. கிச்சிலிப்பனை,
14. குடைப்பனை,
15. இளம்பனை
16. கூறைப்பனை,
17. இடுக்குப்பனை,
18. தாதம்பனை,
19. காந்தம்பனை,
20. பாக்குப்பனை,
21. ஈரம்பனை,
22. சீனப்பனை,
23. குண்டுப்பனை,
24. அலாம்பனை,
25. கொண்டைப்பனை,
26. ஏரிலைப்பனை,
27. ஏசறுப்பனை,
28. காட்டுப்பனை,
29. கதலிப்பனை,
30. வலியப்பனை,
31. வாதப்பனை,
32. அலகுப்பனை,
33. நிலப்பனை,
34. சனம்பனை
திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி மனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்
No comments:
Post a Comment