Friday, 22 November 2019

கருங்காலி மரம்


கருங்காலி மரம்
 கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது.
இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது..
தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்..!
கருங்காலி மரம் மருத்துவ பயன்கள்..!
உடலுக்கு வலிவைத்தரும் ரஸாயனமாகும், குரிர்ச்சி தன்மை கொண்டது,
பற்களுக்கு வலிவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது .
கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன் படுத்தப் படுகிறது,
வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.
கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும்
நீங்கும்.

*ராசியும் நட்சத்திரமும்*
கருங்காலி மரம் மேஷம் ராசி, விருச்சிகம் ராசி, அஸ்வினி நட்சத்திரம், பரணி நட்சத்திரம், விசாகம் நட்சத்திரம், அனுஷம் நட்சத்திரம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மரமும், மருந்துமாகும்.
நோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும்
எல்லா கோயில்களிலும் கும்பாபிசேகத்தின் பொது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள்
அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை
கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம் ..
ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது ..
மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம்..
கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது.வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும் .

No comments:

Post a Comment