எந்த ராசிக்கு எந்த மரம்
அந்த ஒவ்வொரு மரத்துக்கும் தனியே மருத்துவ குணங்கள் உண்டு. அதனால் தான் பழங்காலத்தில் மக்கள் மரங்களை வழிபட்டு வந்தனர்.
ஒவ்வொரு ராசியினரும் அந்தந்த ராசிக்குரிய மரங்களை வழிபட்டு வந்தாலே அதிர்ஷடமும் நற்பலன்களும் உண்டாகும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் செஞ்சந்தன மரத்தை வழிபட்டு வர வேண்டும். இதற்கு சந்தன வேங்கை என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த மரத்தை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மேஷ ராசிக்காரர்கள் வழிபட்டு வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் அத்திப்பழ மரத்தை வழிபாடு செய்ய வேண்டும். சுப தினங்களில் கோவில்களில்உள்ள அத்திமரத்தை 11 முறை சுற்றிவந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிச்சுமைகள் குறைந்து மனநிம்மதி உண்டாகும்.
மிதுனம்
ஒரு காலத்தில் நிறைய சிவாலயங்களில் வில்வ மரம் இருந்த அளவுக்கு பலா மரங்களும் ஸ்தல விருட்சமாக இருந்துள்ளன. கேரளாவில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் அம்மன்விக்கிரகமே பலா மரத்தில் செய்யப்பட்டிருக்கிறது. பலாமர வழிபாடு குழந்தை பேறைக் கொடுக்கும்.
கடகம்
திருத்தலைச்சங்காடு, திருக்கஞ்சனூர் ஆகிய சிவத் தலங்களில் புரசு (பலாசம்) தல மரமாக உள்ளது. இது பலாசம் என்றும் குறிப்பிடப்படுகிறது. இது பகட்டான செம்மஞ்சள் நிறப் பூங்கொத்தினையும், தட்டையான விதைகளையும் உடைய இலையுதிர் காடுகளில் தானே வளரும் மரமாகும். அழகுக்காக வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுவதுண்டு. இதன் இலை, பூ, விதை, பட்டை, பிசின் ஆகியவை மருத்துவக் குணமுடையதாக விளங்குகிறது.
இது காமம் பெருக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் இருக்கும். அவ்வளவு சிறப்பான மருத்துவ குணம் கொண்ட வழிபடுவதில் தவறில்லையே.
சிம்மம் -
சிம்ம ராசிக்காரர்கள் குருந்த மரத்தை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு சகல செல்வங்களும் கைகூடி வரும். இது திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோயிலின் தல மரமாக விளங்குகிறது. இதில் சிறுகுருந்து, பெருங்குருந்து என்னும் வகைகளும் உண்டு. உடல்வெப்பத்தை தணிக்கும் மருத்துவ குணம் கொண்டது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் மாமரம். ஏகாம்பர நாதர் கோவில் மற்றும் மயிலாடுதுறை,திருப்பெரும்புதூர் சிவன் கோவில்களில் மாமரம் தல விருட்சமாக இருக்கிறது. முருகன் சிவனை மாமரத்தின் அடியில் நின்று வணங்கி வரம் பெற்ற சிறப்புண்டு. அதனால் மா மரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்தால் மூதாதையர்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் மகிழ மரம். மகிழம்பூ மரத்தின் மணம்மிக்க மலர்களில் இருந்து, வாசனைப் பொருட்கள் எடுக்கப்படுகின்றன. மகிழம்பூவில் இருந்து எண்ணெய் எடுத்து அதில் சந்தன மர எண்ணெய் கலந்து வாசனை திரவியங்கள் தயாரிக்கலாம். மகிழ மரத்திற்கு அதிக ஈரப்பதம் தேவையில்லை. ஆனால் தண்ணீர் தேங்கக் கூடாது. இதன் உயரம் 20 முதல் 50 அடி உயரம் வளரக் கூடியது. அடர்த்தியான இலைகளையுடைய, நறுமணமான பூக்களை உடைய பசுமை மரம்.
இந்த மரத்தை வழிபட்டால் கல்வியும் ஞானமும் பெருகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய மரம் கருங்காலி மரம். வெப்பத்தை தங்கிவளரும். இம்மரத்திலிருந்து பெறப்படும் கட்டைகள் மிக உறுதி மிக்கவை. கருப்பு நிறமுடைய இக்கட்டைகள் பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகின்றன. நூற்றாண்டுகளாக இரும்பை ஒத்த உறுதியுடன் கூடிய பலகைகள் இம்மரத்தில் இருந்து பெறப்படுகின்றன. குறிப்பாக இந்த மரத்தின் நடுப்பாகமான கருமை நிறம் கொண்டப் பகுதியை வைரம் என்பர். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி உறுதியளிக்கும் சக்தி கொண்டது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய மரம் அரசு. அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றது. அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறன.
அரச மரத்தின் பட்டை, வேர், விதை இவற்றைப் பாலில் கொதிக்க வைத்து, ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பை, மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும்.
அரச மரத்திலிருந்து வெளியிடப்படும் தூய்மையான அதிகப்படியான பிராணவாயு நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் ஈட்டி மரம். குறிப்பாக, பூராட நட்சத்திரத்தன்று நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வது உங்கள் குறைகளைப் போக்கி, இனிமையான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய மரம் வன்னி. சிவனுக்கு மட்டுமே முதல் தலவிருட்சமாகும். வன்னி மர குச்சிகள் இல்லையென்றால் சிவனுக்கு எந்தவொரு யாகமும் முக்த்தி பெறாது. அதனால், வன்னி மரம் தல விருட்சமாகக் கொண்ட சிவனை வழிபடுவது சிறப்பாகும். தஞ்சை பெரிய கோவில், கங்கை கொண்ட சோழீஸ்வரம் ஆகிய கோவில்களில் வன்னி மரமே தல விருட்சமாக அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment