Friday 22 November 2019

திருவோடு மரம்


திருவோடு மரம்



கோயில்களுக்கு முன்பாக அமர்ந்திருக்கும் சாமியார்களின் கையில் திருவோடு வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். கருப்பு நிறத்தில் காய்ந்த தேங்காயை நேர்வாக்கில் பாதியாக வெட்டியது போன்று  இருக்கும். இதை திருவோடு, அட்சய பாத்திரம், கபாலம் என்ற பெயர்களில் அழைப்பர்.

சரி... இந்த திருவோடு ஒரு மரத்தின் காய் என்றால் வியப்பாக உள்ளதல்லவா?

திருவோடு மரத்தின் காய்களிலிருந்து இவை செய்யப்படுகின்றன.
கடினத்தன்மை வாய்ந்த இந்த மரத்தின் பழங்கள் உடைப்பதற்கு மிகக்கடினமாக இருக்கும்.  இது மற்ற பழங்களைப் போன்று நிலத்தில் போட்டால் எளிதாக வளர்ந்துவிடாது.

விதையை மூடியுள்ள பழத்தோடு நிலத்தில் போட்டால் வளராது. கடினத்தன்மை வாய்ந்த ஓடுகளால் இதன் விதைகள் மூடப்பட்டுள்ளதால் காடுகளில் கூட அதிகம் வளராமல் போய்விட்டது. அதனாலே இது ஒரு அரிதான மரமாகவும், மாறுபட்ட இயல்புடனும் இருந்து வருகிறது.

உள்ளூர் குதிரைகள் தங்களுடைய காலால் இந்த பழத்தை உடைத்து பழத்திலிருக்கும் சதைப்பற்று மற்றும் விதைகளை சாப்பிடும் என்கிறார்கள். தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே நுட்பமானத் தொடர்பு வியப்பானது.

பொதுவாக திரு ஓடுகளில் அன்னம் அல்லது பிட்சை பெறுவது சாதுக்கள் பழக்கமல்ல. அதில் , பழங்கள் அல்லது காசுகள் பெற்றார்கள்.பணம் சம்பந்தப் பட்டதால் , அது திரு ஓடு என வழங்கப்பட்டது.

பொதுவாக இம்மரங்கள் காணப்படுவது இல்லை. கடுமையான மேல் தோல் உடைந்து , சதை மண்ணில் வீழ்ந்து மறையும் போதுதான் இம் மரம் செடியாக முளைக்கத் துவங்கும் !
வளமான சமூகத்தில் , பிட்சை பெறுவதைக் குறைக்கவே இறைவன் வெகு அரிதாக இம் மரங்களை உண்டாக்கி இருக்கவேண்டும். ஏனெனில் , தூய இல்லறப் பெண்டிர் மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் அனைவரும் இப்படித் திருவோடு நீட்டும் சாதுக்களுக்கு பிட்சை இடுவதே தங்கள் பாக்யமாகக் கருதினர்.
இதையே அவ்வையாரும்
பாத்திரம் அறிந்து பிட்சையிடு என்றார்.
பாத்திரம் என்றால் திருவோடு மட்டுமல்ல. அதை ஏந்துகின்ற சாதுவின் குண நலன்கள் (பாத்திரம்) அறிந்து பிட்சையிட வேண்டும்.
இங்கணம் பாத்திரம் அறியாமல் பிட்சையிட்ட சீதாதேவியின் கதை , அனைவரும் அறிந்ததே


No comments:

Post a Comment